இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் வலி மற்றும் நோய் தணிப்பு சிகிச்சை மையம் ….

தமிழக அரசு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை சார்பில் வலி மற்றும் நோய் தணிப்பு சிகிச்சை மையம் மற்றும் மார்பக ஊடுகதிர் உபகரணம், மருத்துவமனை இணையதளம் மற்றும் குழந்தைகள நிலைப்படுத்துதல் தீவிர சிகிச்சை பிரிவு ஆகியவற்றை தமிழக தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து, இராமநாதபுரம் அரண்மனை வாசல் முன் நடந்த பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், சுகாதார பணிகள் இணை இயக்குநர் முல்லைக் கொடி, மருத்துவமனை கண்காணிப்பாளர் ஐவகர்லால், நிலைய மருத்துவர் (பொறுப்பு) மலையரசு, தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க இராமநாதபுரம் மாவட்ட தலைவர் சிவக்குமார், டாக்டர் சிவானந்த வல்லி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை உள்பட பலர் பங்கேற்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!