இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் சுமைதாங்கி கிராமத்தில் முத்துமாரியம்மன், சேது மகா காளி அம்மன் முளைப்பாரி விழா, கர்மவீரர் காமராஜர் பிறந்த நாளையட்டி கிராம இளைஞர்கள் சார்பில் 24ம் ஆண்டு கபடி போட்டி நடந்தது. போட்டியை தமிழக் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் துவங்கி வைத்தார்.
சுமைதாங்கி கிராம முக்கியஸ்தர்கள் முன்னிலையில் பெண்களிடம் குறைகள் கேட்டறிந்தார். அங்கு ஊரணிக்கு படித்துறை அமைத்து தர வேண்டும். புதிய கிணறு தோண்டி தர வேண்டும் என கோரிக்கைகள் வைத்தனர். கிணறு தோண்டி தருவதாக அமைச்சர் மணிகண்டன் பெண்களிடம் உறுதியளித்தார். சுமைதாங்கி தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள், இலவச நோட்டு, கணித உபகரணங்கள் வழங்கினார். தமிழக முதல்வர் பெயர் யார் என அமைச்சர் மணிகண்டன் மாணவர்களிடம் கேள்வி கேட்டார். எடப்பாடி பழனிச்சாமி என அனைத்து மாணவர்களும் ஒருமித்த குரலில் பதிலளித்தனர். நான் என கேட்டபோது சில மாணவர்கள் மட்டும் மணிகண்டன் என்றனர். அப்போது தலைமை ஆசிரியை குறுக்கிட்டு டாக்டர் மணிகண்டன், தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் என்றார். ஐ.டி. மினிஸ்டர் என அமைச்சர் சொன்னதும் மாணவர்கள் கை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
நிகழ்ச்சிகளில் கிராமத் தலைவர் பால்ராஜ், செயலாளர் திருப்பதி, பொருளாளர் பால்பாண்டி, திருப்புல்லாணி ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் முனியாண்டி, ராமநாதபுரம் நகராட்சி முன்னாள் தலைவர் ராமமூர்த்தி, சட்டசபை தொகுதி முன்னாள் இணை செயலாளர் தஞ்சி சுரேஷ், கடலாடி ஒன்றிய துணை செயலாளர் சண்முகபாண்டியன், ராமநாதபுரம் நகர் ஜெயலலிதா பேரவை செயலாளர் முத்துப்பாண்டியன், அரசு வழக்கறிஞர் மண்டபம் கே.என்.கருணாகரன், மண்டபம் ஒன்றிய செயலாளர் முத்தாண்டி, சாத்தக்கோன்வலசை வீரபத்திரன், ராமநாதபுரம் நகர் இளைஞர் பாசறை செயலாளர் மணிகண்டன், மாவட்ட பிரதிநிதி இளையபாரதி, நிர்வாகிகள் ஆதில் அமீன், காளிதாஸ், குமார், களரி தியாகராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.




You must be logged in to post a comment.