விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் சட்ட மன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 1கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டிடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,
தமிழக அரசுக்கு ஸ்டாலின் கொடுக்கும் அறிக்கைகள் அனைத்துமே அக்கப்போறானதாகத்தான் உள்ளது என்று அமைச்சர் குற்றச்சாட்டு.. கொரானா தடுப்பு பணியில் தமிழக அரசின் செயல்பாடுகள் சரியில்லை என்ற கே.எஸ்.அழகிரி குற்றசசாட்டிற்கு, குறை கூறுபவர்கள் குறை சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள்.
கொரானா தாக்கத்தினால் தமிழ்நாட்டில் தண்ணீர் தட்டுப்பாடு ,மின்சாரத்தடை போன்று எந்த பிரச்சினையும் மக்களுக்கு இல்லை. சாத்தான்குளம் பிரச்சனையில் தவறு செய்தவரை காப்பாற்றும் முயற்சியை முதல்வர் ஒருபோதும் எடுக்க மாட்டார் அதனால்தான் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்து உள்ளார்.
விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தமிழகம் முழுவதும் கொரானாவின் தாக்கம் அதிகம் உள்ள நிலையில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்து அடிக்கல் நாட்டு விழா பூமி பூஜை போன்றவற்றில் கவனம் செலுத்துவதாக கூறிய குற்றச்சாட்டிற்கு பதிலளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
மக்கள் பிரதிநிதிகள் அமைச்சர்கள் முதல்வர் யாரும் கிராமப் பகுதிகளுக்குள் செல்ல வில்லை என்றால் மக்களிடம் பயம் வந்துவிடும் அதனால் தான் அனைத்து பகுதிகளுக்கும் செல்கிறோம். கொரானாவிற்கு முதலில் மருந்தே மன தைரியம் தான். மன தைரியத்தை கொடுக்கும் ஒரு ஆட்சியாக தான் எடப்பாடியார் ஆட்சி இருக்கிறது
மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளை எப்போதும் தடுப்பது கிடையாது என்றும் அவர்கள் அனைவருமே அவர்களது பணியைத்தான் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று பதில் அளித்துள்ளார்.
தமிழக அரசுக்கு ஸ்டாலின் கொடுக்கும் அறிவுரைகள் அனைத்தும் ஆக்கப்பூர்வமாக இருந்தால் முதல்வர் ஏற்றுக் கொள்வார்.அவர் கொடுக்கும் அறிக்கைகள் அனைத்துமே அக்கப்போறானதாகத் தான் இருக்கிறது என குற்றம் சாட்டியுள்ளார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









