தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் வில்லிசேரி கிராமத்தில் தீ விபத்தில் மக்காச்சோளம் மற்றும் பருத்தி சேதம் அடைந்ததை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பார்வையிட்டு ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் வில்லிசேரி கிராமத்தில் தீ விபத்தில் மக்காச்சோளம் மற்றும் பருத்தி சேதம் அடைந்ததை அமைச்சர் கடம்பூர்ராஜூ இன்று (22.02.2019) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- வில்லிசேரி பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினால் 200 ஏக்கர் மக்காச்சோளம், பருத்தி பயிர்கள் முற்றிலும் கருகி சேதம் அடைந்துள்ளது. எனவே விவசாயிகளுக்கு சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சரிடம் தெரிவித்தோம். பயிர்கள் சேதம் அடைந்த விவரம் கணக்கெடுப்பு பணி முற்றிலும் முடிந்து ஒரு நபருக்கு கூட விடாமல் நிவாரண நிதி வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். எனஅமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
பின்னர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் திருநெல்வேலி மாவட்டம் திருவேங்கடம் அருகில் உள்ள வரகனுர் பகுதியில் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்தில் இறந்த நபர்களின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறி, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு மூலம் உரிய நிவாரணம் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், முன்னாள் எம்எல்ஏ.,கள் மோகன், சின்னப்பன், இணை இயக்குனர் (வேளாண்மை) மகாதேவன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பாலசுப்பிரமணியம், கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, கோவில்பட்டி தாசில்தார் .பரமசிவன், வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி, முக்கிய பிரமுகர் விஜயபாண்டியன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


You must be logged in to post a comment.