தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
காட்பாடி காந்தி நகரில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீட்டில் மத்திய பாதுகாப்புப் படை வீரர்களின் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
இந்த சோதனை 2019 மக்களவைத் தேர்தலில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், காட்பாடி அருகே திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் என்பவரின் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போது பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான கிடங்கில் இருந்து ரூ. 11 கோடி கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment.