அரசு பேருந்து ஒன்று இன்று காலை தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கரிசல்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தது, அப்போது திடீரென பஸ்ஸின் முன்பக்க கண்ணாடிகள் எதிர்பாராத விதமாக உடைந்து நொறுங்கியது. கண்ணாடி உடைந்ததில் ஓட்டுனர் மீதும் பஸ்ஸின் முன்பக்கம் அமர்ந்திருந்த பயணிகள் மீதும் கண்ணாடித் துகள்கள் விழுந்ததால் சிறுசிறு காயங்கள் ஏற்பட்டது..
அது சமயம் அந்த வழியாக வந்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜீ ஓட்டுனருக்கும் பயணிகளுக்கும் முதலுதவி செய்து மாற்று பேருந்தில் அனுப்பி வைத்தார். விபத்து நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பயணிகளுக்கு உதவிய அமைச்சரை பொதுமக்கள் பாராட்டியதோடு, நன்றியும் கூறிச் சென்றனர்.
செய்தி:- அஹமது, தூத்துக்குடி


You must be logged in to post a comment.