கீழக்கரையில் அமைச்சர் கடற்கரையில் நடைபாதை அமைக்க அடிக்கல் நாட்டினார்

கீழக்கரையில் அமைச்சர் மணிகண்டன் கடற்கரையில் நடைபயிற்சிக்காக பேவர் ப்ளாக்கில் நடைபாதை அமைக்க இன்று (14-04-2017) அடிக்கல் நாட்டினார்.  இந்நிகழ்ச்சி எந்த ஒரு முறையான முன்னறிவிப்பும் இன்றி திடீரென நடைபெற்றது.  இத்திட்டத்திற்காக சுமார் இந்திய ரூபாய் 9 லட்சம் பொது நிதியில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

மேலும் பொது மக்களின் நன்மையை கருதி நடைபாதை அமைக்கப்படும் பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மலம், ஜலம் கழிப்பதற்கான வசதிகளும் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இப்பகுதியை இரவு நேரத்திலும் பயன்படும் வகையில் ஊரின் மத்தியப் பகுதியில் பயன்பாடில்லாமல் இருக்கும் ஹைமாஸ் விளக்குகளும் இங்கு பொருத்தப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சியை தொடர்ந்து அமைச்சர் அம்பேத்கர் நினைவு தினத்தை ஒட்டி புல்லந்தையில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்தார்.  இந்நிகழ்ச்சிகளில் அரசு அதிகாரிகள் மற்றும் ஆளுங்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடனிருந்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!