திருச்சி மணப்பாறையில் பாரத சாரண சாரணியர் வைர விழாவை முன்னிட்டு பெருந்திரளணி விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்.!

திருச்சி மணப்பாறை சிப்காட் வளாகத்தில் பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைர விழா பெருந்திரளணி மற்றும் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பெருந்திரளணி விழா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் சும்மா 2400 க்கும் பள்ளி மாணவ மாணவியரின் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார் பேரணியில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் மாவட்ட வருவாய் துறை அலுவலர் ராஜலட்சுமி மாநில முதன்மைப் பேராணையர் சாரண சாரணியர் இயக்கம் பெருந்திரள் அணி பொறுப்பாளர் அறிவொளி மாநில கல்வி இயக்குனர் பழனிச்சாமி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கங்காதரணி சாரண சாரணியர் இயக்க நிர்வாகிகள் பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் ஆசிரியர் பெருமக்கள் அரசுத் துறை உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் பேரணியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியும் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார், சாரணியர் இயக்க நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் பேரணியில் பங்கேற்று நடந்து சென்றனர்.

திருச்சி செய்தியாளர் H.பஷீர்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!