பழைய வழித்தடங்களில் இயங்கும் மினி பஸ்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் புதிய வழித்தடங்களை மாற்றி அமைக்க வேண்டும்: மினி பஸ் உரிமையாளர்கள் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் மினி பஸ்கள் இயங்கி வருகிறது. மதுரை மாநகர் மற்றும் கிராமங்களுக்கு இடையே மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தமிழக அரசு சமீபத்தில் மினி பங்களுக்கான புதிய வழித்தடங்களுக்கான அங்கீகாரம் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து மதுரை மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மினி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது:-

பழைய மினி பஸ் உரிமையாளர்களுக்கு ஏற்கனவே வழங்கியுள்ள வழித்தடத்தில் எவ்வித இடையூறு இல்லாமல் நீட்டிப்பு செய்து முதலமைச்சர், போக்குவரத்துறை அமைச்சரும் தக்க ஆலோசனைகளை வழங்கி உள்ளனர்.

கடந்த 25 ஆண்டுகளாக சாலை வரி, காப்பீடு தகுதி சான்றிதழ், உரிமம் புதுப்பித்தல் வரி உட்பட அனைத்து வரிகளும் செலுத்தி வருகிறோம். ஆனால் கடந்த 25 ஆண்டுகளாக வந்த அரசுகள் குறிப்பாக தற்போதுள்ள திமுக அரசும் கூட எங்களது கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை.

இந்த நிலையில் தற்போது தமிழக அரசு, ஏற்கனவே உரிமம் பெற்ற வழித்தடத்தில் மறுபடியும் புதிய உரிமத்திற்கு வழித்தடம் வழங்குவதாக வந்த தகவலை அடுத்து அந்த வழித்தடங்களை அரசு வழங்கும். ஆனால் ஏற்கனவே 25 வருடங்களாக நாங்கள் பெற்ற உரிமம் மிகுந்த நஷ்டத்திற்கு உள்ளாகி விடும்.

எனவே பழைய வழித்தடத்திற்கு பாதிப்பு இல்லாமலும் போட்டி ஏற்படாமலும் தொழிலை சுமூகமாக நடத்துவதற்கு பரிசினை செய்ய வேண்டும். மேலும் ஏற்கனவே உள்ள வழித்தடத்தில் புதிய வழித்தடங்கள் வழங்கும்போது பழைய வழித்தட பாதிக்காத வகையில் புதிய வழித்தடத்திற்கு ஆட்சேபனையும் கூறி உள்ளோம். மேலும் பழைய மினி பஸ் வழித்தடத்தினை மாற்றம் செய்யும் பொழுது முன்னுரிமை வழங்கி அதே உரிமையாளர்களுக்கு அரசு வழங்க வேண்டும் என்றனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!