சிறுதானியங்கள் ஆண்டு, சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை விழிப்புணர்வு முகாம்..

இராமநாதபுரம், செப்.13- 

இந்திய அரசு தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், மத்திய மக்கள் தொடர்பகம் ராமநாதபுரம், சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு, சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை, மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்த ஒருங்கிணைந்த விழிப்புணர்வு முகாம் அழகன்குளம் நஜியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடந்தது. நஜியா மெட்ரிக் பள்ளி முதல்வர் ஆர்.ராதா வரவேற்றார். சிறுதானியங்கள் குறித்தும், சுற்றுச்சூழல் குறித்தும்  மத்திய மக்கள் தொடர்பக  தொழில்நுட்ப உதவியாளர்  எஸ்.ஆர். சந்திரசேகரன்  நோக்கவுரை ஆற்றினார். சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை குறித்து மண்டபம் வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் பி.சாந்தி பேசினார். சிறுதானியங்களின் வகைகள், அதன் நன்மைகள், சிறுதானியம் உண்பதால் ஏற்படும் நோய் கட்டுப்பாடு குறித்து முஹமது சதக் ஹமீது மகளிர் கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் எம்.மீரா பேசினார். சிறுதானியங்கள், சுற்றுச் சூழல் தொடர்பான போட்டிகளில் வென்ற மாணாக்கருக்கு பரிசு வழங்கப்பட்டது. இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் டி.ஜெயராஜூ நன்றி கூறினார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!