தென்காசி அருகே கெமிக்கல் பால் தயாரித்து விற்பனை செய்த சம்பவத்தில் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டனர். தென்காசி மாவட்டம் மேலப்பாவூர் பகுதியை சேர்ந்த நபர் பாலில் கெமிக்கல் பவுடரை கலப்படம் செய்து விற்பனை செய்து வருவதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
இதனையடுத்து, தென்காசி ரயில் நிலையம் அருகே ரசாயன பவுடரை தண்ணீரில் கலந்து பால் தயாரித்து அது பல நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க கெமிக்கலையும் சேர்த்து விற்பனை செய்த மேலப்பாவூர் பகுதியைச் சேர்ந்த கோமதி சங்கர், அவரது மனைவி லெட்சுமி, இவர்களுக்கு ரசாயன பொருட்களை சப்ளை செய்த முப்புடாதி ஆகிய மூன்று பேர்களையும் கைது செய்து தென்காசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தென்காசி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.