மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூரில் கறவை மாடுகளுடன் இலவசமாக பால் வழங்கி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் முத்துப்பாண்டி. வெண்மணி சந்திரன். மானூத்து மகேந்திரன். மானூத்து ஜெயபாண்டி .சி பி எம் முன்னாள் ஒன்றிய செயலாளர் முருகன் விக்கிரமங்கலம் ரவி. கேசம் பட்டி ஜெயக்குமார் வடக்கம்பட்டி குருசாமி வடக்கம்பட்டி ரவி. கருமாத்தூர் ஜெயராஜ் தளபதி ராமர் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.தமிழக அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகள் பசும்பால் லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும்.வருடா வருடம் நெல் கரும்பு கோதுமை போல் அரசு பாலுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். 50% சதமானியத்தில் மாட்டுத் தீவனம் மூடை வழங்க வேண்டும். மதுரை ஆவின் பொங்கலுக்கு போனஸ் வழங்க வேண்டும். கிராமச் சங்கங்களில் பால் ஏற்றும் இடத்திலேயே எடையும் தரத்தையும் குறித்துக் கொடுக்க வேண்டும் ..சத்துணவு மையங்களில் பால் வழங்க வேண்டும் கிராம சங்க ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கறவை மாடுகள் உடன் பொது மக்களுக்கு இலவச பால் வழங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
உசிலை மோகன்
You must be logged in to post a comment.