ஆந்திராவை தலைமையிடமாக கொண்டு டோட்லா, திருமலா, ஹெரிட்டேஜ், ஜெர்சி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்கள் இன்று நள்ளிரவு முதல் பால் விலையை உயர்த்தப் போவதாக பால் முகவர்களுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. அத்தியாவசிய உணவான பால் தேவையை சமாளிப்பதில் தனியார் நிறுவனங்கள் பங்களிப்பு அதிகம் உள்ளது.
அரசு நிறுவனமான ஆவின் தினசரி சுமார் 15 லட்சம் லிட்டர் பால் மட்டுமே கொள்முதல் செய்கிறது. மாநிலத்தின் வணிக பயன்பாட்டில் 85 சதவீதம் தனியார் பால் தான் பயன்படுத்தப்படுகிறது. இதனால் ஹோட்டல், கேன்டீன், டீக்கடைகளில் டீ, காபி விலை கடுமையாக உயரும் அபாயம் உள்ளது. தனியார் பால் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி 1 லிட்டர் பாக் கெட்டின் விலையில் ரூ.2 கூடுதலாகவும், ½ லிட்டர் பாக்கெட் விலையில் ரூ.1 ம் அதிகரிக்கும். அதே போல தனியார் பால் நிறுவனங்களில் தாயாரிக்கப்படும் தயிர் விலையும் லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்படுகிறது. ஒரு லிட்டர் தயிர் ரூ.50-ல் இருந்து 55 ஆகவும், 200 மில்லி பாக்கெட் ரூ.10-ல் இருந்து 11 ஆகவும் உயர்கிறது. ஆவின் பாலை விட தனியார் பால் லிட்டருக்கு ரூ.8 அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.


பேசாமல் அவரவர் வீடுகளில் ஆளுக்கொரு பசு மாட்டை வளர்க்க வேண்டும் இதுதான் இப்போதைக்கு நல்ல தீர்வு