ஆவினை குறிப்பிட்ட மதம் சார்ந்த நிறுவனமாக மாற்றத் துடிக்கும் வீணர் கூட்டம்! பால் முகவர்கள் சங்கம் கடும் கண்டனம்..
இது சம்பந்தமாக சு.ஆ.பொன்னுசாமி தமது கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது;
ஆவின் பால் பாக்கெட்டில் கடந்த சில தினங்களுக்கு முன் இஸ்லாமியர்களின் ரம்ஜான் பண்டிகையையொட்டி வாழ்த்துகளை பகிர்ந்து கொண்ட ஆவின் நிர்வாகம் இன்று தமிழ்ப் புத்தாண்டு, சித்திரைத் திருநாளுக்கு வாழ்த்துச் செய்தி வெளியிடாததை வைத்து ஒரு கும்பல் மத ரீதியாக சமூக வலைதளங்களில் தாக்குதல் தொடுத்து வருகிறது.
ஆவின் பால் பாக்கெட்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகள், குடியரசு தினம், சுதந்திர தினம், தேசிய பால் தினம் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த தேசிய தினங்கள் என வாழ்த்துச் செய்தி வெளியிடுவதை மட்டுமே ஆவின் நிர்வாகம் வழக்கமாக கொண்டிருந்தது.
ஆனால் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மேற்கண்ட முக்கியத்துவம் வாய்ந்த தேசிய தினங்களுக்கு வாழ்த்துச் செய்தி வெளியிடாமல் திட்டமிட்டு புறக்கணித்து வருவதோடு புதிதாக ஆயுத பூஜை, விஜய தசமி உள்ளிட்ட மதம் சார்ந்த பண்டிகைகளுக்கு வாழ்த்துச் செய்தி வெளியிடும் புதிய நடைமுறையை திராவிட மாடல் அரசும், ஆவின் நிர்வாகமும் அமுல்படுத்தி, செயல்படுத்தியும் வருகின்றன.
முக்கியத்துவம் வாய்ந்த தேசிய தினங்களுக்கு ஆவின் பால் பாக்கெட்டுகளில் வாழ்த்துச் செய்தி வெளியிடாமல் புறக்கணித்த ஆவின் நிர்வாகத்திற்கும், திராவிட மாடல் அரசுக்கும் எதிராக இதுவரை பொங்காத அந்த வீணாய் போன வீணர் கூட்டம் தமிழ்ப் புத்தாண்டு என்று வாழ்த்துச் செய்தி வெளியிடவில்லை என்றாலும் கூட பரவாயில்லை சித்திரைத் திருநாள் என வாழ்த்துச் செய்தி வெளியிட்டிருக்க வேண்டாமா..?, இது இந்துக்களை புறக்கணிக்கும் செயலல்லவா..? என சமூக வலைதளங்களில் கம்பு சுற்றி வருகிறது.
ஆவின் நிறுவனம் என்பது தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பால் நிறுவனமாக இருந்தாலும் அது ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு தாய் பிள்ளைகளாக பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால் முகவர்களால் செயல்பட்டு வரும் மதச்சார்பற்ற நிறுவனமாகும் எனும் போது அந்நிறுவனத்தின் மீது தவறான தகவல்களை கொண்டு ஆவினை ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த நிறுவனமாக மாற்ற நினைக்கும் அந்த வீணர் கூட்டம் முதலில் ஆவினில் நடைபெற்று வரும் ஊழல் முறைகேடுகளுக்கு எதிராகவும், ஊழல் பெருச்சாளிகளை அழித்து, களையெடுக்கவும், திராவிட மாடல் ஆட்சியில் திட்டமிட்டு ஆவினை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்லும் ஆவின் மற்றும் பால்வளத்துறை அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் கம்பு சுற்ற களமிறங்கட்டும். இல்லையெனில் அதே கம்பால் வீணர்கள் விரட்டியடிக்கப்படுவார்கள் என்பதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் எச்சரிக்கை செய்ய கடமைப்பட்டுள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









