நரேந்திர மோடி போட்டியிட தேர்தல் ஆணையம் உடனடியாக தடை விதித்து அவரை தகுதியிழப்பு செய்து இந்திய இறையாண்மையை காத்திட வேண்டும்!-சு.ஆ.பொன்னுசாமி காட்டம்..

தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி கீழ்கண்டவாறு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பல்வேறு மொழிகள், ஜாதி, மதங்கள் கொண்ட உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான நம் தேசத்தில் அவற்றின் பெயரால் வெறுப்புணர்வை விதைத்து, பிரிவினையை தூண்டி, அமைதியை சீர்குலைத்து அதில் குளிர்காய நினைக்கும் எவராயினும் அவர்கள் இந்திய அரசியலமைப்பு தண்டனைச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும்,

அந்த வகையில் 18வது மக்களவைக்கான பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் கடவுளின் பெயராலும், மதத்தின் பெயராலும் பிரிவினைவாதத்தை தூண்டக் கூடிய வகையில் பேசி வெறுப்புணர்வை விதைத்து அதன் மூலம் தேசிய அரசியலில் வெற்றியை அறுவடை செய்ய நினைக்கும் தற்போதைய பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உடனடியாக தகுதியிழப்பு செய்ய வேண்டும்.

எதிர்க்கட்சி வேட்பாளர்கள் என்றால் வேட்டை நாய்கள் போல உடனுக்குடன் பாய்ந்து, பாய்ந்து நடவடிக்கை எடுக்கும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மத்தியில் ஆளும் பாஜக விவகாரத்தில் மட்டும் வீட்டு வளர்ப்பு நாய் போல அவர்களுக்கு நன்றியோடு வாலாட்டிக் கொண்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல இந்திய ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் செயலாகும் என்பதால் நடப்பு மக்களவை தேர்தலில் நரேந்திர மோடி அவர்கள் போட்டியிட தேர்தல் ஆணையம் உடனடியாக தடை விதித்து அவரை தகுதியிழப்பு செய்து இந்திய இறையாண்மையை காத்திட வேண்டும் என கூறியுள்ளார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!