“பால் முகவர்கள் சங்கத்தின் 17ம் ஆண்டு பொதுக்குழு, 18ம் ஆண்டுக்கான (2025) நிர்வாகிகள் தேர்வு!-18வது முறை மாநில தலைவராக சு.ஆ.பொன்னுசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்..

“பால் முகவர்கள் சங்கத்தின் 17ம் ஆண்டு பொதுக்குழு, 18ம் ஆண்டுக்கான (2025) நிர்வாகிகள் தேர்வு!-18வது முறை மாநில தலைவராக சு.ஆ.பொன்னுசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்..

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் 18வது நிர்வாகக் குழுவை தேர்வு செய்வதற்கான மாநில பொதுக்குழு கூட்டம் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி அவர்களின் தலைமையில், மாநில பொதுச் செயலாளர் எஸ்.பொன்மாரியப்பன் அவர்களின் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை (08.12.2024) மாலை 3.00மணியளவில் சென்னை, எருக்கஞ்சேரியில் உள்ள சக்தி பாலக கட்டிட வளாகத்தில் நடைபெற்றது.

பொதுக்குழு கூட்டத்தில் நேரிலும், இணைய வழி (Zoom Meeting) வாயிலாகவும் கலந்து கொண்ட பொதுக்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகளை மாநில பொருளாளர் எஸ்.முருகன் அவர்கள் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து பால் முகவர்கள் சங்கத்திற்கு 18ம் (2025) ஆண்டு நிர்வாகக்குழுவிற்கான நிர்வாகிகள் தேர்வும், பால் முகவர்களின் வாழ்வாதாரம் தொடர்புடைய ஆவின் மற்றும் தனியார் பால் நிறுவனங்களுக்கான முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்களும், மத்திய, மாநில அரசுகளுக்கான பொதுத் தீர்மானங்களும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

அதன்படி பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனரான சு.ஆ.பொன்னுசாமி அவர்கள் 18வது முறையாக மீண்டும் மாநில தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்துடன் 7வது முறையாக மாநில பொதுச் செயலாளராக திரு. எஸ்.பொன்மாரியப்பன் அவர்களும், 4வது முறையாக மாநில பொருளாளராக திரு. எஸ்.முருகன் அவர்களும் மீண்டும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மேலும் புதுச்சேரி மாநில ஒருங்கிணைப்பாளராக திரு. ஆ.பெருமாள், தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர்களாக எஸ்.எம்.குமார், எம்.சக்திவேல், மக்கள் தொடர்பாளராக ஜெ.அபுபக்கர் ஆகியோரும்,

மாநில துணைத் தலைவர்களாக கரூர் ரா.கண்ணன், மதுரை எம்.கே.முகம்மது முகையுத்தீன்,  தூத்துக்குடி சொ.ராஜா, வேலூர் வி.எம்.சங்கர், சென்னை ஓ.ஈ.மகேந்திரவர்மன், எஸ்.பால்துரை, ஆர்.கே.காண்டீபன், நா.குமார் ஆகியோரும்,

மாநில இணைச் செயலாளர்களாக செய்யாறு ஆர்.கிரி, திண்டுக்கல் ஆர்.சாகுல்ஹமீது, சென்னை எஸ்.சுரேஷ்குமார், ஜி.பவுல் சந்தோசம், து.யோகபிரசாத், கே.ராமு, வேதாரண்யம் ஆர்.சரவணகுமார், கோவை எம்.ஜாகிர் உசேன், ஓசூர் க.செ.அருள்தாஸ் ஆகியோரும்,

மாநில துணைச் செயலாளர்களாக சென்னை எம்.ஏ.காஜா மொய்தீன், ஆர்.ராஜேஷ், மதுரை எம்.ரூபன், அருப்புக்கோட்டை த.சுதாகர், திருத்துறைப்பூண்டி ஆர்.சிவக்குமார், கோவை சு.மனோகர், திருவண்ணாமலை க.பார்த்திபன், திருச்சி ந.குமாரசாமி, ஈரோடு சி.ஜோதீஸ்வரன் ஆகியோரும்,

மாநில செயற்குழு உறுப்பினர்களாக சென்னை கு.ராகுல், ம.கோபிநாத், வாணியம்பாடி ஆர்.மாதேஸ்வரன், திருவண்ணாமலை வி.துரைமுருகன் ஆகியோரும் பொதுக்குழு உறுப்பினர்களால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அத்துடன் இதுவரை சங்கத்தின் சட்ட ஆலோசகர்களாக இருந்து சிறப்பான ஆலோசனைகளை வழங்கி, சங்கத்தின் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு அளித்து வரும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு. ஆர்.தனசேகர் அவர்களுக்கும் மற்றும் திரு. ஏ.பிரபுதாஸ் அவர்களுக்கும் பொதுக்குழுவில் நன்றி தெரிவித்து தீர்மானம் இயற்றப்பட்டதோடு, அவர்கள் இருவரும் தொடர்ந்து சங்கத்தின் சட்ட ஆலோசகர்களாக இருந்து ஒத்துழைப்பு தருமாறு பொதுக்குழு கேட்டுக் கொண்டு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!