கீழக்கரை நடுத்தெரு ஜூம்மா பள்ளிவாசல் பின்புறம் அருகில் உள்ள கால்வாய் அடைப்பு காரணமாக தினமும் கழிவுநீர் வெளியேறி கொண்டிருந்தது. சில நாட்களுக்கு முன் அதை சீரமைத்து தருமாறு COMMITTEE OF MIF சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் சாலை பணி நடந்து வருவதால் தற்காலிகமாக சீரமைத்து தருகிறோம் என நகராட்சி ஆனையாளர் சார்பாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து தற்காலிகமாக சீரமைத்து தந்தனர்.
ஆனால் தற்காலிக சீரமைப்பு அசல் நாட்கள் கூட தாக்குபிடிக்கவில்லை. மீண்டும் பள்ளியின் வாசலில் கழிவுநீர் ஓடி ஓடிய வண்ணம், சம்பந்தப்பட்டவர்களும் எந்த முயற்சியும் எடுத்ததாக தெரியவில்லை. இதனால் பொதுமக்களுக்கு நோய் மற்றும் விபத்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
இது சம்பந்தமாக MIF நிர்வாகி ஒருவர் கூறுகையில், அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக இருந்தால் மட்டும் சமூக வலைதளங்களில் மும்முரம் காட்டும் ஜமாஅத்தார்கள் பொதுமக்களுக்கு இடையூராக இருக்கும் இந்த விடயத்தில் அக்கரை காட்டாதது ஏன்?. தயவு செய்து ஜமாஅத்தார்கள் ஆக்கப்பூர்வமாக மக்களுக்கு உதவி செய்யுமாறு COMMITTEE OF MIF சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.” என்றார்.


You must be logged in to post a comment.