கீழக்கரையில் வீடியோ துறையில் புது முயற்சி.. பெண்கள் நிகழ்ச்சிக்கு பெண்கள் மட்டுமே… “MIB” Medias..

கீழக்கரையில் விசேஷச வைபவங்களுக்கு புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதில் பல கருத்துக்கள் இருந்தாலும், அனேக பேர் தன் வீட்டு வைபங்களில் பெண்கள் அதிகமாக கலந்து கொள்வதால் ஆண்களை வைத்து புகைப்படமோ, வீடியோவோ எடுப்பதை தவிர்ப்பதுண்டு.

ஆனால் அக்குறையை நீக்கும் வண்ணம் திருநெல்வேலி மற்றும் சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் MIB MEDIAS எனும் கீழக்கரை சகோதரர்களை அங்கமாக செயல்படும் நிறுவனம், இக்குறையை நிவர்த்தி செய்யும் வண்ணம், பெண்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை பயிற்சி பெற்ற பெண் வீடியோ கிரஃபர்களை வைத்து பதிவு செய்யும் சேவையை மிகவும் நவீன முறையில் தொடங்கியுள்ளார்கள்.

இந்நிறுவனம் ஏற்கனவே நாகூர், காயல்பட்டினம் போன்ற பகுதிகளில் இச்சேவையை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!