இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அதிமுக சார்பில் எம்ஜிஆர் 102 வது பிறந்தநாள் விழா நடந்தது . நகர் செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார் . துணை செயலாளர் குமரன், முன்னாள் நகர் செயலாளர் இம்பாலா உசேன், பொருளாளர் அரிநாராயணன், ஜெ., பேரவை செயலாளர் சரவணபாலாஜி, எம்ஜிஆர் பாரூக், 1 வது வார்டு செயலாளர் செல்வகணேஷ், கோபால், பிரபு, பழனி, ஆறுமுகம் ராமு , ராயப்பன் உள்பட பலர் பங்கேற்றனர். அதிமுக தொண்டர்கள், சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கீழக்கரையில் எம்ஜிஆர் 102 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நகர் செயலாளர் கே.ஆர். சுரேஷ் தலைமை வகித்தார். துணை செயலாளர் சிவக்குமார், அவைத்தலைவர் நூருல் ஹக், ஜீவா மகேஷ், மணி, மணிமாறன் சந்திரன், பாலமுருகன், ரஹ்மத்துல்லா, முத்துக்குமார் அருண், சங்கர பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
செய்தி:- முருகன், இராமநாதபுரம்






You must be logged in to post a comment.