சாலையோர சிறு வியாபாரிகளுக்கு புதிய கடைகள் ஒதுக்க மனு – மேட்டுப்பாளையம் தொழிலாளர் சங்கம
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில், சாலையோர சிறு வியாபாரிகளுக்காக புதியதாக கட்டப்பட்ட கடைகள் ஒதுக்கப்பட வேண்டும் என நகராட்சி ஆணையாளர் அமுதா அவர்களுக்கு இன்று மனு வழங்கப்பட்டது.
மார்க்கெட் பகுதியில் நீண்ட காலமாக தினசரி வாழ்வாதாரத்திற்காக சாலையோரத்தில் சிறு வியாபாரம் செய்து வரும் ஏழை மக்களுக்கு, நகராட்சி கட்டியுள்ள புதிய கட்டடங்களில் அமைந்துள்ள கடைகள் ஒதுக்கப்பட்டால், அவர்கள் வாழ்க்கை நிலை மேம்படும் என சங்கத்தினர் தெரிவித்தனர்.
“சாலையோர சிறு வியாபாரிகள் பல ஆண்டுகளாக இடம்பெயர்ந்து கஷ்டப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு நிரந்தர வசதி ஏற்படுத்துவது சமூக நலனுக்கான மிக முக்கியமான நடவடிக்கையாகும்” எனவும் சங்கத்தினர் வலியுறுத்தினர்.


You must be logged in to post a comment.