ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கோயம்புத்தூர் கோஇன்டியா வளாகத்தில் லயன்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் சிறப்பு விழா நடைபெற்றது.
இவ்விழாவில், மேட்டுப்பாளையம் நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஆனந்தகுமார் “நல்லாசிரியர் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றதற்காக சென்னை சென்றிருந்ததால், அவரின் சார்பில் மனைவி நர்மதா ஆனந்தகுமார் கலந்து கொண்டு விருதைப் பெற்றுக் கொண்டார்.
இந்த விழா கோவை மாவட்ட கவர்னர் Ln. ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது. விருதை அண்ணா பல்கலைக்கழக சேர்மன் பாலகுருசாமி வழங்கினார்.
ஆனந்தகுமார் கல்வித்துறையில் ஆற்றிய சேவையும், மாணவர்களுக்கு அளிக்கும் உந்துதலும், சமூகப்பணி மற்றும் கல்வி வளர்ச்சியில் காட்டிய அர்ப்பணிப்பும் சிறப்பாக பாராட்டப்பட்டன. விழாவில் லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
You must be logged in to post a comment.