கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட, நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மணிநகரில் நகராட்சிக்கு சொந்தமான பூங்கா உரிய பராமரிப்பு இல்லாமல் புதர்மண்டி கிடந்தது. இதனால் புழு, பூச்சிகள், பாம்புகள் இருக்கும் என அருகில் வசிக்கும் பொதுமக்கள் அச்சத்துடன், மேலும் விளையாடுவதற்கு இடமில்லாமல் குழந்தைகள் வேதனையில் இப்பூங்காவை பயன்படுத்தாமல் இருந்தனர்.மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளர் அமுதா அவர்களின் பரிந்துரையின் படி, பெரியநாயக்கன்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், நம்ம மேட்டுப்பாளையம் தோழர்கள் மற்றும்வைல்டு லைப் ரேங்லர்ஸ் குழுவினர் இந்தப் பூங்காவை சுத்தம் செய்ய தூய்மை பணியில் ஈடுபட்டனர்.ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் முத்துசாமி இந்நிகழ்வை துவக்கி வைத்தார். மேட்டுப்பாளையம் நகர மன்ற தலைவர் முன்னிலை வகித்தார்.நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் யுவராஜ் , வைல்டு லைப் ரேங்கலர்ஸ் கிறிஸ்டோபர், டேவிட், பென்னி, ரியா ஷெரின் மற்றும் நம்ம மேட்டுப்பாளையம் தோழர்கள் சித்திக், ஷானவாஸ், அபிபுல்லா, பஷீர், சதாம் உசேன், நெளசாத்,சன்ஃபீர்அப்துல் காதர் ஆகியோர் மற்றும் மாணவர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.நம்ம மேட்டுப்பாளையம் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பாஷா, இந்தத் தூய்மை பணியின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களிடம் பேசினார். மேலும் இன்றைய இளைய தலைமுறை இதுபோன்ற சமூகத்திற்கு பயனுள்ள ஆக்கபூர்வமான செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தினார்.மாணவர்களை இது போன்ற சமூகப் பணிகளில் ஈடுபடுத்தும் போது, தவறான பழக்கங்களுக்கு ஆளாகாமல், மாணவர்களிடையே உள்ள ஆற்றலை நற்செயலுக்கு வெளிப்படுத்தும் நிகழ்வாக அமையும் எனபேராசிரியர் ஜெய்குமார் தெரிவித்தார்.ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணினி பயன்பாட்டு துறைத்தலைவர் முனைவர் ஜெய்குமார் மற்றும் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலர் ஜெயராமன் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தனர்நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.மேலும் இதே போன்று இந்த பூங்காவிற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்தி, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.மாலை நேரத்தில் இப்பகுதி பெண்கள், முதியவர்கள் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகள் பொழுதுபோக்கு இடமாகவும், விளையாட்டு பூங்கா, உடற்பயிற்சி இடமாகவும் பயன்படுத்துவோம் என கூறினார்கள்.காலை சரியாக 6 மணி முதல்சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வந்தது மதியம் 2:00 மணிக்கு அப்பகுதி முழுவதும் சுத்தம் செய்யப்பட்டவுடன் அப்பகுதியில் உள்ள குழந்தையின் உடனடியாக விளையாட்டு பூங்காவை பயன்படுத்தி உற்சாகத்துடன் வர துவங்கினாலும் மேலும் அங்கு வந்த குழந்தைகளுக்கு சமூக ஆர்வலர்கள் தின்பண்டம் கொடுத்து அவர்களை வரவேற்றனர் அப்பகுதி மக்கள் மற்றும் குழந்தைகள் உடனடியாக அப்பகுதியை பயன்படுத்தியது அவர்களின் அப்பகுதி சிறுவர்களின் விளையாடும் மைதானம் எப்பொழுது சரி செய்து தருவார்களோ என்ற கவலையில் இருந்தவர்களுக்கு உடனடியாக சரி செய்தவுடன் அவர்கள் முகத்தில் புன்னகையுடன் பூங்காவில் சுத்தம்செய்து கொடுத்த அனைவருக்கும் நன்றியினை கூறினார்கள்

You must be logged in to post a comment.