மேட்டுப்பாளையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு அகப்பயிற்சி தொடக்கம்
தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி மேல் நிலைப்பள்ளி தொழிற்கல்வி பிரிவில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கான பத்து நாள் அகப்பயிற்சி (Internship Programme) மாநிலம் முழுவதும் இன்று துவங்கியது.
அதன் ஒருபகுதியாக, மேட்டுப்பாளையம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கான அகப்பயிற்சி காலை சுபா மருத்துவமனையில் ஆரம்பிக்கப்பட்டது.
தொடக்க நிகழ்வில் சுபா மருத்துவமனை உரிமையாளரும் மருத்துவருமான மகேஸ்வரன் பயிற்சியைத் துவக்கி வைத்து, “மாணவிகள் கல்வியறிவை நடைமுறை வழியில் சமூக நலனுக்காகப் பயன்படுத்த வேண்டும்” எனக் கூறினார்.
பள்ளித் தலைமையாசிரியை சீதாலட்சுமி தலைமை வகித்து மாணவிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் உரையாற்றினார். பெற்றோர்- ஆசிரியர் சங்கத் தலைவர் S. பாஷா , “அகப்பயிற்சி என்பது மாணவிகளின் வாழ்க்கையில் ஒரு முக்கியப் படிக்கட்டு” எனக் குறிப்பிட்டார்.
தொழிற்கல்வி ஆசிரியர் எஸ். ஆனந்தகுமார் மற்றும் பயிற்றுநர் பிரியங்கா அவர்கள், பயிற்சியின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறை வழிமுறைகள், ஒழுக்கம் மற்றும் அனுபவப் பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.
முதல் நாளில் மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டு மருத்துவமனைச் சூழலில் நேரடி அனுபவத்தைப் பெற்றனர்.
இந்நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்ததற்காக பள்ளி சார்பில் சுபா மருத்துவமனைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.


You must be logged in to post a comment.