கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தை சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திடீர் ஆய்வில் ஈடுபட்டார். இந்திய ரயில்வே துறை சார்பில் தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்களில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது இப்பணிகளை சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ் குமார் சின்ஹா திடீர் ஆய்வு மேற்கொண்ட ரயில்வே மேலாளர் இடம் மேட்டுப்பாளையம் தாலுக்கா சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்கத்தினர் கீழ்க்கண்ட கோரிக்கைகளை மனுவாக அளித்தனர் அவருடன் ரயில்வே துறை அலுவலர்கள், பொறியாளர்கள் உள்ளிட்டோர் வருகை தந்தனர். மேட்டுப்பாளையம் ரயில் நிலைய மேலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

You must be logged in to post a comment.