கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தலைமை அஞ்சல் வளாகத்தில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழா தலைமை அஞ்சலக அதிகாரி நாகஜோதி தலைமையில் நடைபெற்றது இவ்விழாவில் அஞ்சலகத்தில் வழங்கப்படும் சேவைகள் குறித்து தலைமை அதிகாரி விளங்கிக் கூறினார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நகரவை பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா மற்றும் முதுகலை வணிகவியல் ஆசிரியர் ஆனந்தகுமார் கலந்து கொண்டு அஞ்சல் துறை சேவைகளையும் தாங்கள் அடைந்த பயன்களையும் எடுத்துரைத்தனர் மேலும் பொதுமக்கள் சேமிக்க அஞ்சலகம் மட்டுமே சிறந்தது என்று கூறினார்கள். அலுவலர் தவநாதன் தொகுத்து வழங்கினார் பொதுமக்களுக்கு அஞ்சல் துறை ஊழியர்கள் சேமிப்பு கணக்குகள் குறித்து விளக்கமளித்தனர் ஜீவிதா சிசி நன்றி கூறினார்.

You must be logged in to post a comment.