மேட்டுப்பாளையத்தில் ஃபித்ரா அரிசி வழங்கும் நிகழ்ச்சி.!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகா சி,ஐ,டி,யு பொது தொழிலாளர் சங்கம் சார்பாக  வசதி இல்லாத மக்களுக்கு ஃபித்ரா அரிசி வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது

இந்நிகழ்ச்சியில் ஃபித்ரா அரிசி 200 க்கு மேற்பட்ட இஸ்லாமியர்களுக்கு மேட்டுப்பாளையம் சிஐடியு தாலுகா பொதுத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் சார்பாக வழங்கப்பட்டது

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்களின் புனித ரமலான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது

இந்த மாதத்தில், இஸ்லாமியர்கள் தங்களது கடமைகளில் ஒன்றான நோன்பு இருப்பது வழக்கமாகும் மேலும்

இஸ்லாத்தில் மிகவும் உன்னதமான செயல்களில் ஒன்று தர்மம் இஸ்லாமியர்கள் வசதி இல்லாத  எளிய மக்களுக்கு உணவு,உடைகள் மற்றும் உதவிகள் வழங்குகின்றனர் இதன் பின்னர் புனித ரமலான் கொண்டாடுகிறார்கள்

ரமலான் பண்டிகைக்கு முன் அல்லது அன்று தர்மம் செய்வது இஸ்லாமியர்களின் கடமையாகும் இந்த கட்டாய தர்மம் ஃபித்ரா என்று குறிப்பிடப்படுகிறது.

ஃபித்ரா செலுத்த அனைவரும் தகுதியுடையவர்கள் இஸ்லாமிய விதிகளின்படி ஒருவர் குறைந்தபட்ச ஃபித்ராவைச் செலுத்த வேண்டும் ஒருவர் எவ்வளவு ஃபித்ரா செலுத்த வேண்டும் என்பது குறித்து ஏராளமான விதிகள் உள்ளன.

 இது மனப்பூர்வமாக நோக்கத்துடன் தர்மம் செய்யும் செயலைக் குறிக்கிறது

ரமழான் மாத இறுதியில் நோன்பு இருக்கும் நாட்களை கடக்க மற்றும் வலிமை , பொறுமையை வழங்கியதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதற்காக மக்கள் அவ்வாறு செய்கிறார்கள்.

நோன்பின் கடைசி நாளின் சூரிய அஸ்தமனத்திற்கும் மறுநாள் சூரிய உதயத்திற்குப் பிறகு விரைவில் செய்யப்படும் ஈத் தொழுகைகள் தொடங்குவதற்கும்முன்பாக ஃபித்ரா செலுத்தப்பட வேண்டும்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!