மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் கருத்து கேட்கும் நிகழ்ச்சி.!

கோவை மாவட்ட  மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பொது இடங்கள், நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் தற்காலிகமாக மற்றும் நிரந்தரமாக வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகள், சமூகம், மதம், சங்கம், சார்ந்த அனைத்து கொடிக்கம்பங்களும் உடனடியாக அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையின் மூலம் உத்தரவிட்டுள்ளது இதற்கான அறிவுறுத்தல் மற்றும் அரசியல் கட்சிகளின் கருத்துக்கள் கேட்பு கூட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது

இக் கூட்டத்தில் மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளர் அமுதா, மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் சின்ன காமணன், நகர அமைப்பு ஆய்வாளர் ஜெயவேல்,உதவி நகரத் திட்டமிடுபவர் மீனாட்சி, ஆகியோர் உடன் இருந்தனர் 

கூட்டத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுத்து, ஏப்ரல் 21 ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் கொடிக்கம்பங்களை அகற்ற முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்று அனைத்துக் கட்சிகள் பிரதிநிதிகள் சார்பாக முடிவெடுக்கப்பட்டது

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!