கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மாவட்ட வன அலுவலர் அவர்களின் உத்தரவின்படியும், உதவி வனப்பாதுகாவலர் அறிவுறுத்தலின் படியும், மேட்டுப்பாளையம் வனச்சரகர் அலுவலர் ஆலோசனையின் படியும், இன்று மேட்டுப்பாளையம் வனச்சரகம், மேட்டுப்பாளையம் பிரிவு, ஜக்கனாரி சுற்று நிர்வாக எல்லைக்குட்பட்ட தென்திருப்பதி நால்ரோடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ குமரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வனத்துறை பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் இணைந்து கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். பின்னர், மாணவர்களுக்கு வனம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்வு மாணவர்களிடையே பசுமையை பேணுவதற்கான பொறுப்பு உணர்வையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஈடுபாட்டையும் உருவாக்கியது.


You must be logged in to post a comment.