கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ரயில் நிலையத்தில் இன்று தூத்துக்குடி வாராந்திர ரயில் மேட்டுப்பாளையம் போத்தனூர் புதிய ரயில்கள் சேவை துவக்கம் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த மத்திய இணை அமைச்சர் எல் முருகன் அவர்களிடம் மேட்டுப்பாளையம் தாலுக்கா சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மேட்டுப்பாளையம் கோவை ரயில்வே பாதையை இருவழிப் பாதையாக அமைக்க வேண்டும் மேட்டுப்பாளையம் கோவை பாசஞ்சர் ரயிலை மேலும் இரண்டு முறை நீட்டிக்க வேண்டும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து கேரளா உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு ரயில்கள் இயக்கம் வேண்டும் திருநெல்வேலி தூத்துக்குடி ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க வேண்டும் இரவு நேரங்களிலும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் செயல்படும் வகையில் கூடுதல் ரயில் சேவைகளை மேட்டுப்பாளையத்தில் இருந்து செயல்படுத்த வேண்டும் மேட்டுப்பாளையம் கோவை பேசஞ்சர் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் தற்போது மேட்டுப்பாளையத்தில் நடைபெற்று வரும் ரயில் நிலைய சீரமைப்பு பணி விரைவுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர் நிகழ்வில் ரயில்வே உயர் அதிகாரிகள் சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகள் சம்சுதீன் சித்திக் ரங்கநாதன் ஹபிபுல்லா முஹம்மது அலி ஜின்னா அஜ்மீர் மகாலிங்கம் நவ்ஷத் நசருல்லா பதுருதீன் நிஜாமுதீன் மகாலிங்கம் சதாம் உசேன் பஷீர் அப்துல் காதர் ஷானவாஸ் ஆகிய தோழர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர் இந்த நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் ரயில்வே காவல்துறையினர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட மத்திய அமைச்சர்கோ ரிக்கையின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்

You must be logged in to post a comment.