மேட்டுப்பாளையம் சி ஐ டி யு பொதுத் தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை மனு

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தை ஆய்வு  மேற்கொண்ட ரயில்வே கோட்ட மேலாளரிடம் சி ஐ டி யு பொதுத் தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளராக ஸ்ரீபன்னா லால் ஆய்வில் ஈடுபட்டார். இவரிடம், ரயில்வே சம்பந்தமான கோரிக்கைகளை சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை மனுவில் மேட்டுப்பாளையம்- கோவை இடையேயான பய ணிகள் ரயில் சேவையினை தினமும் ஏழு முறை இயக்க வேண்டும், கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும், மேட்டுப்பாளையத்தில் இருந்து திருநெல்வேலி தூத்துக்குடி சேவையினை தினசரி ரயில் சேவையாக மாற்ற வேண்டும் கோவையிலிருந்து புறப்படும் கண்ணனூர் பாசஞ்சர் ரயிலை மதியம் 2:20 க்கு கோவையில் இருந்து இயக்க வேண்டும். கோவையில்இருந்து அதிகாலை 6:00 மணிக்கு இயக்கும் மங்களூர் ரயிலை மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து இயக்க வேண்டும். மேற்கு பகுதியை இணைக்கும் வகையில் பாரதிநகர் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக பயன்படுத்த வேண்டும் திட்டத்தை சரியாக செயல்படுத்தி. செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். ரயில் நிலையத்தில் தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். இந்த ஆய்வின்போது, ரயில்வே துறை அலுவலர்கள், பொறியாளர்கள் மேட்டுப்பாளையம் ரயில் நிலைய மேலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ரயில்வே காவல்துறையினர் உடன் இருந்தனர்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!