கீழக்கரையில் மலேசியா உணவு – “மெரினா ஃபுட் கோர்ட் & லஸ்ஸி கார்னர்”..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை என்றாலே பாரம்பரிய உணவான, தொதல், ஓட்டுமாவு, பொறிக்கஞ்சட்டி கொளுக்கட்டை, இடியாப்ப சோறு போன்ற உணவுகளே நினைவுக்கு வரும். ஆனால் சமீப காலத்தில் அந்த நிலை மாறி கீழக்கரை மாநகரிலே உலகத்திலுள்ள பல வகையான அரேபியன் மந்தி மற்றும் கபாப் வகைகள், பிற ஊர் பிரபலமான ஆம்பூர், வாணியம்பாடி, தலப்பாகட்டு பிரியாணி வகைகள், மேல்நாட்டு சான்ட்விச் வகைகள் என அனைத்து வகையும் இப்பொழுது கிடைக்கிறது.

இத்தனை வகைகளுடன் நாளை முதல் கீழக்கரை முஸ்லிம் பஜார், காதர் தம்பி காம்ப்ளக்ஸ் வளாகத்தில் நாளை (30-03-2018, வெள்ளிக்கிழமை) உதயமாகிறதுமெரினா ஃபுட் கோர்ட் & லஸ்ஸி கார்னர்”. இந்த உணவகம் மலேசியாவில் கிடைக்கும் அனைத்து உணவு வகைகளும் சுவையாக வழங்கும் விதமாக பிரத்யேகமாக தொடங்கப்படுகிறது. இங்கு மலேசிய வகை உணவு மட்டுமல்லாமல் இந்திய நாட்டின் சுவை மிகு உணவுகளும் கிடைக்கிறது. இந்த உணவகத்தின் உரிமையாளர் சாதிக் மலேசியா நாட்டில் 15 வருடங்களுக்கு மேலாக மலேசியா நாட்டில் சிறந்த உணவகங்களில் வேலை பார்த்த அனுபவம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த உணவகத்தின் உரிமையாளர் சாதிக் கூறுகையில், “ இங்கு 50க்கும் மேலான மலேசியா உணவு வகைகள் பரிமாற உள்ளோம், அதே போல் அனைத்து வகையான உணவுகளும் சுகாதார முறையில் மேல் தளத்தில் தயாரிக்கப்பட்டு கீழே வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ளோம். மேலும் இந்த உணவு – “மெரினா ஃபுட் கோர்ட் & லஸ்ஸி கார்னர்”. இங்கு மலேசியாவின் பிரபல உணவான மீன் மண்டை முதல் குளிர்பானங்கள் வரை கிடைக்கும்” என்றார்.

“மெரினா ஃபுட் கோர்ட் & லஸ்ஸி கார்னர்”, கீழக்கரையில் உள்ள உணவு பிரியர்களுக்கு விருந்தாக அமைய போகிறது என்பதில் ஐயமில்லை. இந்த புதிய தொழில் வெற்றி பெற நாமும் வாழ்த்துவோம்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!