தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் சுதந்திர போராட்ட தியாகி இம்மானுவேல் சேகரன் 66-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள தியாகி இமானுவேல் சேகரன் திருவுருவப்படத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வே. ஜெயபாலன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் ஷெரிப், மாவட்டத் துணைச் செயலாளர் கென்னடி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சேக் தாவுது, ஜேசுராஜன், ஒன்றிய செயலர்கள் ரவிசங்கர், அழகு சுந்தரம், சீனித்துரை, நகர செயலாளர் சாதீர், பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜேஸ்வரன், சாமிதுரை, அணி அமைப்பாளர்கள் கிருஷ்ணராஜ் டாக்டர் அன்பரசன் இசக்கி பாண்டியன் பரமசிவன் தங்கராஜ் பாண்டியன், ஜே.கே. ரமேஷ் முத்துராமலிங்கம், சங்கரநாராயணன், நசீம், ஆயிரபதி முத்துவேல், பொன் செல்வன், கோ.மாறன், சரவணன், பரமசிவன், கருப்பண்ணன், சந்திரசேகர், ஒன்றிய கவுன்சிலர் மல்லிகா, ஷேக் பரித், ராமராஜ், மாரிமுத்து, ஜபருல்லாகான், பாப்பா, கலாநிதி, காசி கிருஷ்ணன், கொடி கோபாலகிருஷ்ணன், கணேசன், இஞ்சி இஸ்மாயில் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும், தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் இம்மானுவேல் சேகரனின் நினைவு தினத்தை முன்னிட்டு ஒன்றிய திமுக அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இம்மானுவேல் சேகரன் திருவுருவப்படத்திற்கு தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் திமுக செயலாளர் செல்லத்துரை தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாநில விவசாய அணி நெசவாளர் அணி துணை அமைப்பாளர் ஆனைகுளம் அப்துல்காதர், கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், ஒன்றிய துணைச் சேர்மன் ஐவேந்திரன், திட்டக்குழு உறுப்பினர் முருகன், நகர்மன்ற உறுப்பினர் சிட்டி திவான் மைதீன், ஒன்றிய கவுன்சிலர் பகவதி அப்பன், எஸ் பி கே.டி. குமார், நெடுவயல் கணேசன், முருகானந்தம், நல்லையா பீர் முகமது, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மீரான் முதலியான் கான், நகரத் துணைச் செயலாளர் காசி உட்பட ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர் சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









