மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் மதுரை மேற்கு மாவட்டம் கட்சி சார்பாக ஆசாத் ஹிந்து சர்க்கார் விழா மற்றும் முன்னாள் எம் எல் ஏ பி என் வல்லரசு 24 வது நினைவு நாளில் அஇபாபி கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி வளாகத்தில் உள்ள பி என் வல்லரசு நினைவிடத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் துவக்கி வைத்த ஆசாத் ஹிந்து சர்க்கார் விழா மற்றும் பி.என்.வல்லரசு 24 வது நினைவு தினத்தில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பாக முன்னாள் எம் எல் ஏ மற்றும் அஇபாபி மாநில பொதுச் செயலாளர் பி வி கதிரவன் தலைமையில் மாநில செயலாளர்கள் வடிவேல் ஐ. ராஜா பாஸ்கர பாண்டியன் பி.பி. இளையரசு மாவட்ட செயலாளர் மணிகண்டன் மாவட்ட தலைவர் ஆதிசேடன் மாவட்ட கவுன்சிலர் ரெட் காசி மாயன் ஆகியோர் முன்னிலையில் வல்லரசு நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினர். இந்த விழாவில் ஒன்றிய செயலாளர் ஆச்சி ராஜா மலைச்சாமி உசிலம்பட்டி 58 பாசன கால்வாய் விவசாய சங்கத்தினர் தலைவர் ஜெயராஜ் துணைத் தலைவர் மகாராஜன் செயலாளர் சிவப்பிரகாசம் மற்றும் விவசாயகள் சங்க நிர்வாகிகள் அஇபாபி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
உசிலை மோகன்
You must be logged in to post a comment.