நிலக்கோட்டையில் வரும் 6ம் தேதி மறைந்த விஜயகாந்த் அவர்களுக்கு மலரஞ்சலி நினைவேந்தல் கூட்டம்.

கேப்டனின் நிலக்கோட்டை வட்டார அபிமானிகள் மற்றும் தேமுதிக நிலக்கோட்டை ஒன்றியம் சார்பாக நிலக்கோட்டை நால்ரோடு அருகே எதிர் வரும் 6 ம் தேதி மாலை 4 மணியளவில் விஜயகாந்த் திருவுருவ படத்திற்கு மலஞ்ரலியும் அதனைத் தொடர்ந்து நினைவேந்தல் கூட்டம் நடைபெற உள்ளது.இந்நிகழ்வுக்கு அனைத்து கட்சி பொறுப்பாளர்களும் அழைக்கப்பட உள்ளனர்.

முதற்கட்டமாக,திமுகவின் தெற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் மணிகண்டன்,நகர செயலாளர் ஜோசப் கோவில்பிள்ளை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொருப்பாளர் பெ.ச‌.உலகநம்பி, ஆகியோரை நிலக்கோட்டை தேமுதிக தெற்கு ஒன்றிய செயலாளர் வெள்ளைச்சாமி, வடக்கு ஒன்றிய செயலாளர் ஏவிஆர்.பழனி, நிலக்கோட்டை பேரூர் கழக செயலாளர் ஜவுளி ஏ.முருகன், கிழக்கு மாவட்ட பொருளாளர் மாசானம், வடக்கு ஒன்றிய பொருளாளர் சௌந்திர பாண்டி,ஒன்றிய அவைத் தலைவர் செல்வம்,எக்ஸ் அவைத் தலைவர் நம்பிராஜன், ஒன்றிய இளைஞர் அனி செயலாளர் ஐயர் பாண்டி, கேப்டன் மன்ற செயலாளர் கருப்புசாமி, ஆகியோர் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!