காரியாபட்டியில்  இல்லங்கள் தோறும் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம்..

 காரியாபட்டி -அக்-4     திமுக இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாமினை, அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி  வைத்தார். திமுக இளைஞரணி செயலாளரும்  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு  மேம்பாட்டுத்    துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவின் படி, விருதுநகர் வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பாக இல்லந்தோறும் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. காரியாபட்டி, மல்லாங்    கிணறில் முகாம் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முகாமினை, தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கிருஷ்ணகுமார், மாவட்ட துணை அமைப்பாளர்கள் ஆவியூர் சிதம்பர பாரதி, அரசகுளம் சேகர், கார்த்திகேயன், அய்யனார், திலீபன் மஞ்சுநாதன், ஜெகன் பால்பாண்டி, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் போஸ் (எ) ஜெயச்சந்திரன், மல்லாங்கிணறு பேரூராட்சித் தலைவர் துளசிதாஸ், பேரூர் செயலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!