பாம்பன் நான்கு வழிச்சாலை புதிய பாலத்தைமாற்றியமைக்க கோரி பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சருக்கு ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி கடிதம்.!
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பன் நான்கு வழிச்சாலை புதிய பாலத்தை குடியிருப்புகளை பாதிக்காத வகையில் மாற்றியமைக்க கோரி பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ வ வேலுவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் கே நவாஸ்கனி எம்பி ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் சந்தித்து கடிதம் வழங்கினார்.
இது குறித்து நவாஸ்கனி எம்பி வழங்கிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாவது,
இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பாம்பன் பகுதியில் புதிதாக அமைக்கப்படும் நான்குவழி சாலை பாலத்தால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக கவலை தெரிவிக்கின்றனர். 400க்கும் மேற்பட்ட வீடுகள் இதன் மூலம் பாதிக்கப்படும்.
எனவே திட்டத்தை மாற்று வழியாக மாற்றி அமைக்க கோரி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
குடியிருப்புகளை பாதிக்காத வகையில் இப்பாலத்தை மாற்று வழியில் மாற்றி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.என்று தெரிவித்தார்.
You must be logged in to post a comment.