மதுரை மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் அமலில் உள்ளது. இதன் காரணமாக அந்த பகுதிகளில் உள்ள மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன.இதனை பயன்படுத்தி ஒரு சிலர் கள்ளச்சாராயம்
காய்ச்சி விற்பனை செய்வதாக மேலவளவு போலீசுக்கு புகார் வந்தது.இந்த நிலையில் மதுரை மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த உடப்பன்பட்டி பகுதியில் யாரோ கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பதாக மேலவளவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குபேந்திரனுக்கு தகவல் வந்தது.இதையடுத்து அவர் போலீஸ் படையுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஒருவர் கையும் களவுமாக பிடிபட்டார். அவரிடமிருந்து 2 லிட்டர் கள்ளச் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.போலீசாரின் விசாரணையில் அவர் உடப்பன்பட்டியை சேர்ந்த ராமன் (வயது 65) என்பது தெரியவந்தது. அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து மேலவளவு போலீசார் ராமனை கைது செய்து அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்,
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.