ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலமடை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே புதிதாக கட்டப்பட்ட கால்வாய் மூடி உடைந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு பொதுமக்களுக்கும் ஆபத்தான முறையில் இருந்து வருகிறது.. சில மாதத்திற்கு முன்பாக தரமற்ற கம்பிகள் மூலம் மூடிகள் போடப்பட்டு இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அப்பகுதியில் அரசு போக்குவரத்து பேருந்துகள் கனரக வாகனங்கள் வந்து செல்லும் சாலையாக இருப்பதால் தரமான மூடிகளை அமைத்து தர வேண்டும் என்றும் தரமற்ற மூடிகளை அமைத்து ஒப்பந்தக்காரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சி தலைவருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

You must be logged in to post a comment.