இராமநாதபுரம், அக்.24-
ராமநாதபுரம் மாவட்டம் சோஷியல் டெமாகரடிக், டிரேடு யூனியன் சார்பில் ஊரக பனியாளர்களின் கலந்தாய்வு கூட்டம் இன்று நடந்தது. டிரேடு யூனியன் மேற்கு மாவட்ட தலைவர் யூசுப் தலைமை வகித்தார். மாநில தலைவர், முஹமது ஆஷாத், மாநில பொதுச் செயலர் ரவூப் நிஸ்தார், மாநிலத் துணைத்தலைவர் அப்துல் சிக்கந்தர், வுமன் இந்தியா இயக்க மாவட்டக்குழு உறுப்பினர் கார்த்திகை செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கலந்தாய்வு கூட்டத்தில், CSTs, CBC, CRP போன்ற துறை களைசேர்ந்த, ஊரக கள பயிற்றுர்களான பெண்கள் பங்கேற்றனர். அக்.4 ல் ஊரக வாழ்வாதார இயக்கத்தின் 151வது குழும கூட்ட அறிக்கை தொடர்பாக விவாதிக்கப்பட்டது. சீர் அமைப்பு பகுப்பாய்வு திட்டம் மூலம், கிராமத்திற்கு பணியாளர் ஒருவர் என்பதை 2 பேர் ஆக உயர்த்த வேண்டும். +2 கல்வித் தகுதி , ஆண்ட்ராய்டு மொபைல் பயன்படுத்த தெரிந்தோரை பணிக்கு நியமனம், குறித்து விவாதிக்கப்பட்டது.
எட்டாம் வகுப்பு கல்வித்தகுதி அடிப்படையில் கடந்த 2010 முதல் பணியாற்றுவோர் அதே தகுதியில் பணியில் நீடிக்க செய்ய வேண்டும் புதிதாக தேர்வு செய்யப்படுவோரை + 2 கல்வி தகுதி என தேர்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
கடந்த பல ஆண்டுகளாக பணி செய்து வரும் ஊரக சமூகப் பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். ஊரக சமூக களப் பயிற்றுனர்களுக்கு வழங்கிய ஊக்கத்தொகை ரூ. 2500 ஐ ரூ.10,000 ஆக உயர்த்தி தர வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. டிரேடு யூனியன் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் காதர் கனி நன்றி கூறினார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









