இராமநாதபுரம், அக்.14 – தேசிய, தமிழக சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவு படி இராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் இன்று நடந்தது. முதன்மை மாவட்ட நீதிபதி எஸ். குமரகுரு தலைமை வகித்தார். விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி பி.சி. கோபிநாத், தலைமை குற்றவியல் நிதித்துறை நடுவர் கே.கவிதா, சார்பு நிதிபதி சி.கதிரவன், நீதித்துறை நடுவர் ஜி.பிரபாகரன், கூடுதல் மகிளா நிதிபதி இ.வெர்ஜின் வெஸ்டா, வழக்கறிஞர் சங்க இணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கு பெற்றனர். இதில் குடும்ப தல வழக்குகள், வாகன விபத்து, வங்கி வராக்கடன், நகராட்சி, நில ஆக்கிரமிப்பு, மின்சாரம், குடிநீர், காசோலை தொடர்பாக வழுக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர், ராமேஸ்வரம், கடலாடி, திருவாடானை ஆகிய நீதிமன்றங்களில் 8 அமர்வுகளில் 536 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதில் 58 வழக்குகளில் சமரசம் ஏற்பட்டு, ரூ.2.23 கோடி தீர்வுத் தொகை அறிவிக்கப்பட்டது.


You must be logged in to post a comment.