திருப்பரங்குன்றம் தனியார் மண்டபத்தில்  தமிழக வழக்கறிஞர் அலுவலக குமாஸ்தாக்கள் சங்க  31 வது பொதுக்குழு கூட்டம்..

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம்  தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு வழக்கறிஞர் குமாஸ்தாக்கள் சங்க 31 வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இதில் மாநிலத் தலைவர் லெங்கா ராம் தலைமை வகித்தார், மாநில பொதுச்செயலாளர் தேவராஜன் முன்னிலை வைத்தார், தலைவர் ஆறுமுகம்.  பொருளாளர் பூந்தமல்லி ரஞ்சித் குமார் ஆகியோர் வரவேற்புரை கூறினார். மாநில பொதுக்கூட்டத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், திருச்சி ,கோவை திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சை உள்ளிட்ட பகுதியிலிருந்து  நிர்வாகிகள் 700 பேர் வந்திருந்தனர்.  தமிழக வழக்கறிஞர் குமாஸ்தாக்கள் சங்க கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

நாலு லட்ச  குமாஸ்தாக்களுக்கு வழங்கப்படும் சேமநலநிதி ரூபாய் 4 லட்ச ரூபாயிலிருந்து சேமநலநிதி 7 லட்சம் ஆக உயர்த்தி வழங்கவும்.

கொரோனா காலங்களில் வழங்கப்பட்ட  சேமநல நிதியில் பற்றாக்குறையாக உள்ள 2 கோடி ரூபாயை மாநில அரசு வழங்க கோரியும்

குமாஸ்தாக்கள் சேம நல நிதிக்கு வசூலிக்கப்படும் ஸ்டாம்ப் கட்டணம் 10 ரூபாயிலிருந்து 20 ரூபாயாக உயர்த்தினால் கூடுதல் நிதி ஆதாயம் பெற உதவும் எனவும் முதல்வர் மற்றும் சட அமைச்சருக்கும் கோரிக்கை வைக்கப்பட்டது.

முடிவில் பூந்தமல்லி குமாஸ்தாக்கள் சென்ற தலைவர் பழனி நன்றி கூறினார்..

செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!