பாரத சாரண சாரண இயக்கம் மாவட்ட செயற்குழு கூட்டம்..

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சாரண மாவட்ட செயற்குழு கூட்டம், திருவண்ணாமலை முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.மாவட்டக் கல்வி அலுவலர் கி.காளிதாஸ், மாவட்ட தலைவர் மணி, மாவட்ட துணைத் தலைவர்கள் செல்வம், இளம்பரிதி, மாவட்ட ஆணையர்கள் சுஜாதா, மு.சேகர், அன்னாள் கிருபை, ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னதாக மாவட்ட செயலர் ம.வெங்கடேஷ் அனைவரையும் வரவேற்று பேசினார்.

இக்கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் பாரத சாரண இயக்கத்தின் உறுதி மொழியை கூறி பதவி ஏற்று கொண்டனர். செங்கம் மாவட்டத்தின் சாரணர் இயக்கச் செயல்பாடுகளை மேம்படுத்தும் வழிமுறைகள். மாணவர்கள் மத்திய, மாநில விருதுகள் பெற ஆசிரியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள். சாரணர் இயக்கச் செயல்பாடுகளை வட்டார அளவில் நடத்துதல், பயிற்சித் திடலை பராமரிக்க நிதி ஆதாரங்களை பெருக்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

செங்கம் மாவட்ட பயிற்சி ஆணையர் பாலகுமார் சாரண இயக்கத்தில் ஆசிரியர்கள் எவ்வாறு படை நடத்தி செல்வது என விளக்கினார். உதவி ஆணையர்கள் எஸ் கே வி மெட்ரிக் பள்ளி முதல்வர் மணி, சிகரம் இன்டர்நேஷனல் பள்ளியின் முதல்வர் காயத்ரி வாழ்த்துரை வழங்கினர்.

மாவட்ட ஆணையர் அன்பழகன், மாவட்ட அமைப்பு ஆணையராக செந்தமிழ்ச் செல்வன், மாவட்ட பொருளாளராக செந்தில்குமார், பயிற்சி ஆலோசகராக சரவணக்குமார், ஞான அந்தோணி ராஜ், உதவி அமைப்பு ஆணையராக வேலு, தினேஷ்குமார், உதவி செயலராக லட்சுமிகாந்தன், சாரணிய பயிற்சி ஆணையராக செல்வி.கோமதி, சாரணிய அமைப்பு ஆணையராக மகாலட்சுமி, சாரணிய தலைமையிடத்து ஆணையராக பூங்குழலி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். நிகழ்ச்சியின் முடிவில் இணைச் செயலர் ஸ்டெல்லா நன்றி கூறினார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!