மதுரை மாவட்ட ஆன்லைன் ஆட்டோ ஓட்டுநர்கள் தொழிற்சங்கத்தின் சார்பாக ஆலோசனை மற்றும் செயற்குழு கூட்டம்…

மதுரை வில்லபுரம் குடியிருப்போர் நலசங்க வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட மதுரை தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சிங்காரவேலன், மதுரை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர் சித்ரா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு ஆட்டோ ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.  ஒரு ஓட்டுநர்  அரசு சொல்ல கூடிய அனைத்து விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்றும் மேலும் ஆட்டோ ஓட்டுனர்கள் மக்களிடம் மனிதநேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் சாலையில் விபத்து ஏற்பட்டால் உடனே அவர்களுக்கு முதலுதவி செய்து அருகில் உள்ள மருத்துவமனையில் கொண்டு போய் சேர்ப்பது ஒரு உயிரை காப்பாற்ற நினைப்பது மனித நேயத்தின் உச்சமான செயல் ஆகவே மனிதநேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் குறிப்பாக பள்ளி குழந்தைகளை தங்களது ஆட்டோவில் ஏற்றி செல்ல வேண்டாம் என்ற பொது தகவல்களையும் பதிவு செய்தார்கள். இது போன்ற பல்வேறு ஆட்டோ ஓட்டுநர்களை ஊக்கப்படுத்தும் விதமான தகவல்களை கூறினார்கள்..

இக்கூட்டத்தை தலைமை தாங்கியவர்கள் தொழிற்சங்கத்தின் தலைவர் பி எம் முருகன் மற்றும் செயலாளர் எஸ் ராஜா முகமது மற்றும் ஒருங்கிணைப்பாளர் எஸ் சையது ஹனிபா ஆகியோர் தலைமை தாங்கினார்கள் கூட்டத்திற்கு சங்கத்தின் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!