கீழக்கரையில் காவல்துறை தலைமையில் கூட்டம்.. ரமலான் பண்டிகை சிறப்பு வழிபாடுகள்.. கொண்டாட்டங்களை தவிர்க்க வலியுறுத்தல்..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை உட்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்திலும் அதிகமாககொரோனா வைரஸின் தாக்கம் பரவிவருகிறது. அதனால் தமிழக அரசு முழு ஊரடங்கு பிறப்பித்தது அனைத்து வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் முஸ்லிம்களுக்கு இன்னும் ஓரிரு நாள்களில் ரம்ஜான் பண்டிகை வர உள்ள நிலையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடத்துவதற்காக அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கீழக்கரையில் உள்ள அனைத்து ஜமாத் மற்றும் இயக்கங்கள் சார்பில் சிறப்பு தொழுகை நடத்துவதற்கு அனுமதி கேட்டு மனு அனுப்பப்பட்டிருந்தது.

அந்த மனு இன்று கீழக்கரை காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு காவல் துணை கண்காணிப்பாளர் முருகேசன் மற்றும் கீழக்கரை காவல் ஆய்வாளர் செந்தில்குமார் கீழக்கரை உள்ள அனைத்து ஜமாத் மற்றும் இயக்கங்களின் தலைவர்களை காவல்நிலையத்தில் அழைத்து தமிழக சுகாதாரத்துறை தகவலின்படி தமிழகத்தில் அதிகமாக கொரோனா வைரஸ் பரவும் காரணத்தினால் எவ்வித மத வழிபாடுகளும் நடத்தக் கூடாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளதாக கூறினார்கள். அதை கீழக்கரை அனைத்து ஜமாத்தார்கள் மற்றும் இயக்க தலைவர்கள் ஏற்றுக் தொழுகை பள்ளிகளில் எவ்வித வழிபாடுகளும் நடக்காது என்று உறுதி அளித்தார்கள்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!