மதுரையில் அனைத்து மறவர்கள் கூட்டமைப்பு மாநாடு..

மதுரை பழங்காநத்தத்தில் அனைத்து மறவர்கள் கூட்டமைப்பின் சார்பாக மாநாடு நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பொதுச்செயலாளர் மாரிமுத்து கூறியதாவது, 1979 கைவிடப்பட்ட DNTஐ மீண்டும் கொண்டு வர வேண்டும். முத்துராமலிங்க தேவர் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.  மறவர் சீரமைப்பு வாரியம் அமைக்கப்பட வேண்டும்.

மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களுக்கு தமிழ்நாட்டில் எந்த அடையாளமும் இல்லை. அதனால் மதுரையில் பிற்கால பாண்டிய மன்னரான முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனுக்கு சிலை வைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

இக்கூட்டத்தில்  தலைவர் செல்லசாமிதேவர், பொதுச்செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் கே.கே போஸ், முதுநிலை தலைவர்கள் டிராவல்ஸ் முத்துசாமி, துரைப்பாண்டி, மயில் மணிபாண்டியன், விழா ஒருங்கிணைப்பாளர் முத்துராஜ், ஒருங்கிணைப்பாளர் முத்துராஜ் உடனிருந்தனர்.

செய்தி:- கனகராஜ், மதுரை

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!