குலசேகரபட்டிணம் ராக்கெட் ஏவுதாள திட்டத்தினை கைவிடக்கோரி ஆலோசனைக்கூட்டம் தூத்துக்குடி தெற்கு மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுநல அமைப்பு தலைவர் G.T.சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டம் 14/12/2021 காலை 11 மணி அளவில் கந்தபுரம் சுடலை மாடன் சாமி கோவில் முன் புறம் நடைபெற்றது. இதில் திருச்செந்தூர் தொகுதியை சார்ந்த பெரும்பான்மையான கிராமங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள். கூட்டத்தில் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. முக்கியமாக குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதள திட்டத்தைப் பற்றி கலந்துரையாடல் நடைபெற்றது.
இதில் பெரும்பான்மை மக்கள் திட்டத்திற்கான எதிர்ப்பை தெரிவித்துக் கொண்டார்கள் அதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் ராஜ்ரூபஸ் வழக்கறிஞர், க.முகைதீன் மாநில பொதுச்செயலாளார், தமிழ்நாடு மக்கள் நலன்காக்கும் இயக்கம், T.சிவலூர் முருகேசன், சமுக ஆர்வலர், சேக்முகம்மது, தெ.மா.வி.ந.அமைப்பு, V.தாமஸ் பூபால்ராயன் வழக்குகறிஞர், S.காசிலிங்கம் மாநிலகுழு, த.மக்கள்.ந.கா. இயக்கம், S.மூர்த்தி மாவட்டதலைவர் த.மக்கள்.ந.கா. இயக்கம் மற்றும் கந்தபுரம் அமராபுரம் பெரியதாழை மணப்பாடு, அமலிநகர், கூடல்நகர், மற்றும் விவசாயிகள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு அடுத்த கட்ட நகர்வு சம்பந்தமாக விவாதிக்கபட்டது.





You must be logged in to post a comment.