ஊரகவளர்ச்சித் துறை அனைத்து பணியாளர் சங்கம் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் சங்கம் கலந்தாய்வு கூட்டம்….

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்திற்குட்பட்ட ஊரகவளர்ச்சித் துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் திருப்புல்லாணியில் உள்ள வீனஸ் மஹாலில் 4.10.2020 தேதி மாவட்டத் தலைவர் க. ரவி (தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கம்) மற்றும் ஜெயபரதன் (ஊரகவளர்ச்சித்துறை அனைத்து பணியாளர் சங்கம்) மாநிலத் துணைத் தலைவர் நாகேந்திரன் (தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கம்) மற்றும் மாநில இணைச் செயலாளர் ஜெயபாரதன் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கம் தலைமையிலும். திருப்புல்லாணி ஒன்றிய தலைவர் ஜெயபால், செயலாளர் நாகராஜ், பொருளாளர் திருமதி நளினா தேவி முன்னிலையில் நடைபெற்றது.

கலந்தாய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் ஊராட்சி செயலர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும், தூய்மை காவலர் மற்றும் OHT ஆபரேட்டர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்றும். ஊராட்சி செயலர்களுக்கு பணியில் ஏற்படும் இடர்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மனு அளிப்பது, மேலும் மாவட்ட செயற்குழு கூட்டம் 18 10 2020 அன்று நடத்துவது குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இறுதியில் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் சேகு ஜலாலுதீன் நன்றி கூறினார்.

கீழை நியூஸ் SKV முகம்மது சுஐபு

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!