இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சோனை மீனாள் பெண்கள் கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி முன்னாள் தலைவரும், தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவருமான சோர் பாலகிருஷ்ணன் வெண்கல உருவச் சிலை திறப்பு விழா நடந்தது. கல்லூரி சேர்மன் சோ.பா.ரெங்கநாதன் வரவேற்றார். மாநிலங்களவை உறுப்பினரும் மத்திய முன்னாள் அமைச்சருமான ப.சிதம்பரம் திறந்து வைத்தார்.
தமிழக சட்டமன்ற காங்., கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, தமிழக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன், வ. சத்தியமூர்த்தி, சுப. தங்கவேலன், எஸ்.சுந்தர்ராஜ், முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா எஸ். பாண்டியன், மாவட்ட காங்., தலைவர் எம்.தெய்வேந்திரன், மாவட்ட திமுக., பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ப.சிதம்பரம் பேசுகையில், மக்களைப் பற்றியே சிந்தித்தவர் கோபாலகிருஷ்ணன். எப்பொழுதுமே அரசியலைப் பற்றி மட்டுமே சிந்தித்தவர் தன் குடும்பத்தைப் பற்றி எங்கேயும் பேசாத ஒருவர் என்றும் மக்கள் தினமும் அவரை சந்தித்து அவருக்கு பணம் கொடுப்பவர் அதை வைத்தே அவர் அரசியல் செய்ததாகவும் அதேபோல் மக்கள் அனைவருக்கும் நிதி உதவி செய்யலாம் என்றும் நகைச்சுவையாக கூறினார் ஆனால் அவரின் நேர்மையை மக்கள் உணர்ந்தேன் நான்கு முறை அவரை சட்டமன்றத்திற்கு அனுப்பினர் என்றார்.
ராஜகண்ணப்பன் பேசியதாவது: பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தோல்விக்கு உட்கட்சி பூசலே காரணம் எனவும், மானாமதுரை சட்ட மன்ற தொகுதியை எங்களிடம் ஒப்படைத்து இருந்தால் வெற்றியை உறுதி செய்து இருப்போம். 2009 நாடாளுமன்றத் தேர்தல் சிவகங்கை தொகுதியில் ப. சிதம்பரம் எப்படி வென்றார் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும் என்றார் . இதற்கு பதிலளித்த ப. சிதம்பரம், காங்கிரஸ் கட்சியைப் பற்றியும், ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர் என்பதையும், தான் திமுக மூலமே பயணிக்க உள்ளது என பல விஷயங்கள் ஒப்புக்கொண்ட ராஜகண்ணப்பன், 2009 சிவகங்கை நாடாளுமன்ற தேர்தல் எனது வெற்றியை ஒப்புக் கொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை என நகைச்சுவையுடன் பதில் தெரிவித்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பேசுகையில், ஜனநாயகத்தை காக்கும் கடமை காங்கிரஸ் பேரியக்கத்திற்கு மட்டுமே உள்ளது. மதச்சார்பற்ற கட்சிகள் காங்கிரசுடன் ஒன்று சேர்ந்து காங்கிரசை வலிமைப்படுத்தி, மதவாத சக்திகளை வீழ்த்த வேண்டும். காங்கிரஸ் கட்சியின் வலிமையற்ற தன்மைக்கு அதிலிருந்து விலகிய தலைவர்களே காரணம். அவர்கள் தனியாக பிரிந்து மாநில கட்சியாக சக்திவாய்ந்த உருவாகியுள்ளனர் அவர்கள் அடுத்த 5 ஆண்டுக்குள் காங்கிரஸ் கட்சியுடன் மீண்டும் இணைந்து மதவாத கட்சிகளை தோற்கடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









