கோவில்பட்டியில் அனைத்து துறை ஓய்வூதியம் சங்க கூட்டம்..

கோவில்பட்டியில் டிச.27-ம் தேதி அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம்  நடந்தது.

வட்ட தலைவர் வி.முருகன் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் எம்.ஜெயசந்திரன் பேசினார். மாவட்ட தலைவர் சி.கருணாகரன், மாவட்ட செயலாளர் எல்.ராமமூர்த்தி, மாவட்ட பொருளாளர் திரவியம், சாரதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 21 மாத ஊதிய நிலுவை தொகையை வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். காப்பீடு மாதாந்திர சந்தாவை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!