முன்னாள் ராணுவவீரர்கள் – காவல் துறையினர் கலந்தாய்வுக் கூட்டம்..

கோவில்பட்டி காவல் துணைக் கோட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளைச் சேர்ந்த முன்னாள் ராணுவவீரர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளின் கலந்தாய்வுக் கூட்டம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பொன்ராம் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், முன்னாள் ராணுவவீரர் நலச் சங்க உதவி இயக்குநர் நாகராஜன், ஒருங்கிணைப்பாளர் செரீபாய்,காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் ஜெபராஜ், காவல் துறை ஆய்வாளர்கள் ஆவுடையப்பன் (கயத்தாறு), சுதீசன் (கோவில்பட்டி கிழக்கு), அய்யப்பன் (மேற்கு) மற்றும் உதவி ஆய்வாளர்கள், முன்னாள் ராணுவவீரர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பொன்ராம் முன்னாள் ராணுவவீரர்கள் வரும் மக்களவைத் தேர்தலில் தேர்தல் பணியில் ஈடுபட தாமாகவே முன்வர வேண்டும். தங்களுடன் பணிபுரிந்த முன்னாள் ராணுவவீரர்களையும் தேர்தல் பணியில் பணியாற்ற அழைத்து வரும்படி கேட்டுக் கொண்டார். மேலும், தாங்கள் தேர்தல் பணியில் ஈடுபடும்போது தங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் எவ்வித தங்கும்தடையுமின்றி செய்துதரப்படும் என்றும், தாங்கள் தங்களுக்கு கடந்த தேர்தலில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை எடுத்துக் கூறினால் வரும் தேர்தலில் அதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும் வழிவகை செய்யப்படும். முன்னாள் ராணுவவீரர்கள் கடமை, கண்ணியத்துடன் தேர்தல் பணி சிறப்பாக அமைய முழுமனதோடு ஒத்துழைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார் அவர். கோவில்பட்டி முன்னாள் ராணுவவீரர்கள் நலச் சங்கத் தலைவர் கேசவராஜன் நன்றி கூறினார்.

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!